20 வயது இளம் நடிகர் கேமரூன் பாய்ஸ். டிஸ்னியின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதால் அமெரிக்கா மட்டும் இன்றி உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவர்.

சமீபத்தில் கேமரூனுக்கு உடல் நிலை சரியில்லாததால்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீர் என இவருடைய உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது அவருக்கு அளித்த சிகிச்சை தவறானதால்,  இவர் தூக்கத்தில் இறக்க நேரிட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மிக சிறிய வயதிலேயே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் மத்தியிலும் தன்னுடைய நடிப்பால், இளம் வயதிலேயே இந்த உலகை விட்டு பிரிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இவருக்கு பல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.