1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக் கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் திடீரென சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். 

 

இதையும் படிங்க: சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி டி.டி... வைரல் கிளிக்ஸ்...!!

மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு மேலும் பணம் தேவை என்பதால் ரஜினியும் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் பேசும் போது.." எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: தஞ்சாவூர் ஆண்களை அவமதித்த வனிதா... சொந்த ஊர்காரங்கள தப்பா பேசவில்லை என அதிரடி விளக்கம்...!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகர் பொன்னம்பலம் இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கடந்த சில தினங்களில் தனக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருபது முறைக்கும் மேல் வந்தது என பொன்னம்பலம் கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

 

இதையும் படிங்க: உடலை விட்டு நழுவும் வழு வழு உடையில் அமலா பால்... அதிரடி கவர்ச்சியுடன் அம்மணி சொன்ன வாழ்க்கை தத்துவம்...!

சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த போதும் தனது பிள்ளைகளுக்காக எதுவுமே சேமிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ள பொன்னம்பலம், தனக்கு சிகிச்சைக்கு உதவும் படி முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், விக்ரம், ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனது ஸ்டண்ட் யூனியனில் இருந்து யாருமே தன்னை பார்க்க வரவில்லை என்றும், ஸ்டண்ட் யூனியன் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு காலத்தில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த பொன்னம்பலத்தின் பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.