காலாவின் அதிகாரப்பூர்வ டீசர் அப்படியொன்றும் ரஜினியின் ரசிகர்களைக் கவராமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஷங்கர் தயாரிப்பின் ரஜினியின் கனவு ப்ராஜெக்டான 2.0 படத்தின் டீஸர் லீக் ஆகி, மெகா இயக்குநர் ஷங்கருக்கு மெகா ஷாக்கை கொடுத்திருக்கிறது. 

டீஸரில் என்ன இருக்கிறது?...

தமிழகத்தை சேர்ந்த ஷங்கரும், தமிநாட்டில் பிழைக்க வந்த ரஜினியும் இணைந்து, ஈழ தமிழகத்தை சேந்த லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் கோடிகளி உருவாக்கிய 2.0 படத்தின் டீஸரானது எங்கோ ஒரு வெளிநாட்டில் திரைப்பட விழாவில் பெரிய ஸ்கிரீனில் மில்லியன், பில்லியன் மனிதர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது.  1 நிமிடம் 26 நொடிகள் ஓடுகிறது அந்த திருட்டு டீஸர்.

டீஸர்...கேமெரா மேன் நீரவ் ஷாவின் டாப் ஆங்கிள் பார்வையில் துவங்குகிறது. ஒரு மாநகரின் மேல் விதவிதமான பறவைகள் பறக்கின்றன. அவை ஒரு செல்போன் டவரை முற்றுகையிடுகின்றன. காரில் அமர்ந்து பேசிக் கொண்டு போகும் பணக்கார மனிதரின் செல்போன் சட்டென்று பறக்கிறது, அவர் அதிர்கிறார். ஒரு ஷாப்பிங் மாலில் பலரது செல்போன்கள் இப்படி அவர்களின் கைகளை விட்டு பறக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழ் நியூஸ் சேனல் ஒன்றில் ‘செல்போன்கள் திடீர் மாயம், மக்கள் பீதி’ என்று செய்தி வாசிக்கப்படுகிறது. 

டெலிபோன்கள் அலறுகின்றன. மொபைல்களெல்லாம் ஒன்றிணைந்து அக்‌ஷய்குமாரின் குரூர முகமாக மாறி, ‘எந்திரன்’ படத்தின் ரோபோடிக் சயிண்டிஸ்டான டாக்டர் வசீகரனின் முன்னால் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான பறவைகள் சிறகடிக்கின்றன. 

வழக்கமான ஷங்கர் படம் போல், உயர்மட்ட நபர்களின் அவசர ஆலோசனை கூட்டம் ‘திருமலை நாயக்கர் மஹால்’ போன்ற பெரிய கட்டிடத்தில் நடக்கிறது. முக்கிய அதிகாரி ‘இது அறிவியலை தாண்டிய ஒரு விஷயம்’ என்று ஆங்கிலத்தில் கூற, வசீகரன் ரஜினி ‘அதை எதிர்த்து நிற்க ஒரு சூப்பர் பவர் வேணும்’ என்கிறார். ‘அதுக்கு என்ன பண்ணலாம்?’ அப்படின்னு அதிகாரி கேட்க, சிட்டி ரோபாவை ரெக்கமெண்ட் செய்கிறார் வசீகரன். 

எந்திரன் புகழ் சிட்டி ரோபோவின் தலை காட்டப்படுகிறது, அருகிலேயே ஹீரோயின் எமி ரோபோவின் தலை. இதன் பிறகு களமிறங்கும் சிட்டி ரோபோ வழக்கம்போல் பறந்து, பாய்ந்து, வீல் ஷூவில் நகர்ந்து சாகசங்களை பண்ணுகிறது. 

ஏற்கனவே வெளியான தகவலான ‘அக்‌ஷய்குமார் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவர் ஒரு பறவை மனிதராக வருகிறார்.’ என்பதை மெய்ப்பிக்கும் விதமான காட்சிகள் நடக்கின்றன. ராட்சஸ கழுகு, சிட்டி ரோபோவின் தாக்குதல்கள், வெடித்து எரியும் நகரம் என்று ஷங்கரின் அஸ் யூசுவல் கிளிஷேக்களாய் நகர்கிறது டீஸர். அதிலும் ‘எந்திரன்’ ஸ்டைலில் ரோபோ ரஜினியின் கைகளில் வந்து குவிந்து மெஷின் கன்கள் டார்கெட் செய்யும் காட்சியானது ‘இது 2.0 டீசர் தானா?’ என்று டவுட்ட வைக்கிறது. 

டீஸரின் இறுதியில் ரோபோவான சிட்டி ரஜினி ‘ஹூஹ்ஹூஊஊஊஊ ஹ்ஹ்ஹீ’ என வில்லனை பார்த்து நக்கலாய் சிரித்து தனது சன் கிளாஸை இறக்கிவிடுகிறார். 

’A film by Shankar' என்று திரை ஃப்ரீஸாக, அரங்கத்தில் கை தட்டல்.

 அதிகாரப்பூர்வமாக ஷங்கர் க்ரூவால் வெளியிடப்படும் முன்பே இந்த டீஸர் லீக் ஆகி வைரலாக துவங்கியிருப்பது அவர்களுக்கு பெரும் ஷாக்தான். 

தமிழனை மையப்படுத்திய படத்தின் டீஸரை எங்கோ ஒரு தேசத்தில் வெளியிட்டதற்கான தண்டனையா இது? என புரியவில்லை. 

ஆனாலும் அதிகாரப்பூர்வ டீஸரான காலாவை விட இந்த திருட்டு 2.0 டீஸரின் கிளிப்பிங்ஸுகள் கலக்கலாய் இருக்கின்றன. ஆனாலும் இது ‘எந்திரன்’ படத்தின் புது வெர்ஷன் காட்சிகளாய் இருப்பதுதான் சற்றே சலிப்பு.