2.0. rajini film relese on april 2018

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள லைகா நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ .450 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இயக்குநர் சங்கர் இது வேறு கதைக்களம் என தெளிவாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.



இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது. இதையடுத்து, 2018, ஜனவரி மாதம் 2.0 திரைக்கு வரும் என்று லைகா நிறுவன அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

உயர்தரமான இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகின்றன. வெளியீட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2018, ஏப்ரல் மாதம் 2.0 படம் வெளியாகும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது