2.0 promote for balloon

ரஜினி நடித்து அடுத்து வெளி வர இருக்கும் படம் 2.0. இதில் நடிகை ஏமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். லைக்கா புரோடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். லைக்கா புரோடக்க்ஷன் தலைமை அதிகாரி ராஜு மகாலிங்கம் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ஜெயின்ட் பலூன்களில் 2.0 என பதிவிட்டு அதை பறக்க விட உள்ளார்கள். இதன் மூலம் 2.0 படம் உலகளவில் பிரபலம் ஆகும் என எதிர்பார்க்க படுகிறது. பாலுனை பறக்க விட சீரான தட்பவெப்ப நிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படத்தை டிவிட்டரில் பார்த்த ரசிகர்கள் ஜாலியாக ரஜினியை பலூனில் பறக்கவிட ஷங்கர் என கூறிவருகிறார்கள்.