சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்து சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்தித்து கலந்து கொண்டு பேசினார். இந்த சந்திப்பில், அரசியல் குறித்து மூன்று திட்டங்களை வைத்துள்ளதாக அதிரடியாக தெரிவித்தார்.

மேலும் முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், தன்னை வருங்கால முதல்வர் என்பதை ரசிகர்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அதே போல், 45 வயதுக்குள் இருப்பவர்கள் அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரஜினிகாந்த், மற்ற கட்சியில் சேர வாய்ப்பில்லாத நல்லவர்களுக்கு தன்னுடைய கட்சியில் சீட் வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 50 சதவீத பெண்களில் 20 சதவீத பெண்கள் மட்டுமே, சிந்தித்து வாக்களிப்பதாகவும் மற்ற 30 சதவீத பெண்கள், மற்றவர்களிடம் கேட்டு, சுயமாக சிந்திக்காமல் வாக்களிப்பதாக அதிர்ச்சியோடு தெரிவித்தார்.