அண்ணாத்தே படத்திலிருந்து வெளியான சாரா சாரா காற்றே பாடல் தற்போது படைத்துள்ள சாதனை குறித்து பிரபல இசையமைப்பாளர் டீ.இமான் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத சிகரமாக ரசிகர்கள் மனதில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை சிவா இயக்கியிருந்தார். இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

முழுவதும் செண்டிமெண்ட் நிறைந்த கடந்தாண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலை வாரிக்குவித்தது. இந்த படம் அப்போது பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடி ரூபாய் மேல் வசூலித்தது.

மேலும் செய்திகளுக்கு...ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று?...படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..

திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்த படத்தின் 50-வது நாள் விழா கொண்டாடப்பட்ட்து. ஆனால் ரஜினி, தனது வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தார். அதோடு படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக தங்க செயின் பரிசாக அளித்தார். பின்னர் ஓடிடியில் வெளியான அண்ணாத்தே, கடந்த பொங்கல் பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் டிவியில் வெளியாகி தற்போது நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்று கொடுத்தது. 

கிட்டத்தட்ட 17.37 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதுவரை இந்த சாதனையை எந்த முன்னணி நடிகர்களின் படமும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் டீ. இமான் இசையில் வெளியான சாரா சாரா காற்றே பாடல் 5 மாதம் கழித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளதாக இசையமைப்பாளர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…