நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதிக அளவிலான பொருட்செலவில் 2.0 தயாரிக்கப்பட்டுள்ளது. 600 கோடி ரூபாயில் தயரிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் மிகப் பெரிய தொகையில் படம் எடுத்துள்ள தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கொண்ட துணிச்சளுக்கு முதல் வாழ்த்துகள்.

உலகம் முழுவதும் படத்தை விற்பனை செய்ய நடிகர் ரஜினி நடிக்க வைக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இதுவரை பயன்படுத்திடாத அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் சங்கர். சிலாகிக்கும் அளவிற்கு இல்லாவிடினும் மோசமற்ற இசை அமைத்திருக்கிறார் ஏஆர் ரகுமான். ஜெயமோகன் இயக்குநர் சங்கருடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார் என டைட்டில் கார்டில் போட பட்டிருந்தது.

கதையென்று பார்த்தால்., பக்க்ஷி ராஜன் என்னும் பக்க்ஷியாக நடித்துள்ள அக்க்ஷய குமார், செல்போன் டவரில் இருந்து அதிகமாக வெளிவரும் கதிர் அலைகளால் பறவைகள் பாதிக்கப்படுவதை பொதுமக்களுக்கும் அரசிற்கும் தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்துக்கூறுகிறார். செவிகொடுக்கா மக்கள், உதாசீனப்படுத்தும் அரசியல்வாதி நீதிமன்றத்தில் தோற்று போன வழக்கு பக்க்ஷியின் கண்முன்னே இறந்து போகும் பறவைகள் என அடுத்தடுத்து நடக்கும் சம்பங்களால் மணமுடையும் பக்க்ஷி டவர் கோபுரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் செல்போன்களை பறக்கவிட்டு அதன் மூலம் அரசியல்வாதிகளை, தொலைதொடர்பு நிறுவனத்தை பலிவாங்குகிறார். மக்கள் மீதும் பக்க்ஷியின் தாக்குதல் தொடர அதில் இருந்து அறிவியல் விஞ்ஞானி வசிகரன் எந்திரன் சிட்டியின் உதவியுடன் எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை.

ரஜினியின் நடிப்பு :

ரஜினி சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு பயன்படுத்த படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் ஆறுதல் தருகிறது. வயதான ரோபோவாக தான் சிட்டி வேடத்தில் தெரிகிறார். ஓட கூட முடிவயவில்லை ரேம் ஸ்பீடை அதிகப்படுத்தி இருக்க வேண்டும் போல...

கதையும் சங்கரும் :

சங்கர் படத்தில் எதையெல்லாம் பிரமாண்டமாக கருத்துவர்களோ அவை அனைத்தும் இந்த படத்திலும் இருக்கிறது. ஆனால் பிரமாண்டமாக தான் எதுவும் தெரியவில்லை. காட்சிகளை கவனமாக அமைத்துள்ள சங்கர் கதையில் கோட்டை விட்டுவிட்டார். பழிவாங்கும் அக்க்ஷய குமார் ஆவியா? பேயா? அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவரா? என எதுவும் தெரியவில்லை சொல்ல போனால் அக்க்ஷய குமார் கூடு விட்டு கூடு பாய்கிறார். அறிவியல் பெயர்களை சொல்லி எது சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவர்கள் என சங்கர் நினைத்திருப்பார் போல. அந்நியன் படத்தில் அம்பி உடலில் மூன்று பேர் மாறி மாறி பேசுவார்கள் இந்த படத்தில் ரஜினியும் அக்க்ஷய குமாரும் ஒரு உடலில் மாறி மாறி பேசுகிறார்கள். போன படத்தில் ரோபோவுக்கு பெண்ணின் மீது காதல் வந்தது இந்த படத்தில் ரோபோவிற்கு ரோபோ மீதே காதல் வந்துள்ளது. ரோபோவையும் இணை சேர்த்து காதலில் புரட்சி செய்திருக்கிறார். படத்தின் இறுதி வரை டவர் பிரச்சனைக்கும் பறவைகளை காப்பதற்கும் தெளிவான தீர்வு இல்லாமல் படத்தை முடித்திருகிறார் ஆடம்பரத்தின் நாயகன் சங்கர்.

மற்றவை :

இந்த படத்தில் பின்னணி இசை, பாடல் ஆகியவற்றை தனது பாணியிலேயே அமைத்திருக்கிறார் ரகுமான். மன திருப்தி அடையவில்லை என்றாலும் அதிருப்தி வெளிவரவில்லை. எழுதி போடுங்கடா இருக்குனு என்ற வடிவேலுவின் காமெடியை போலவே உள்ளது ஜெயமோகனுக்கு திரைப்பட வசனம் எழுத வரும் என்பது. 3D யை பொறுத்தவரை இல்லை னு வருத்த படாதீங்க இருக்குனு வெளில சொல்லாதீங்க என்ற அளவில் தான் உள்ளது. எந்திரன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரும் ப்ரொபஸ்ஸோர் போராவின் மகன் இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருகிறார் என்பதனை சங்கர் பதிவு செய்துள்ளார். நானும் இங்கு பதிவு செய்திருக்கிறேன் மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ள 2.0 வை குழந்தைகள் கொண்டாடுகிறார்கள். உங்கள் வீட்டு குழந்தைகளும் கொண்டாடுவார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.