நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேலும் 40திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். 

இவர் தன்னுடைய குடும்பத்தினருடன், சேலத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவியிடம் இரண்டு மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பெஞ்சமின் மனைவி எலிசபெத், சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் எலிசபெத்தை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழுத்தில் இருந்து அறுத்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பினர்.

இதைதொடர்ந்து தற்போது எலிசபெத் சூரமங்கலம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.