2 heroine going to act with surya ini 36 th film
சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் நேற்று வெளியானது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை பொறுத்தவரையில்,ஒரு முறை பார்க்கலாம் என பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இப்படம் சூர்யாவின் 36வது படமாகும்.
ஏற்கனவே இப்படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது படக்குழு. இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் தம்பி கார்த்தியுடன் நடித்த ரகுல் பிரீத் சிங், இப்போது அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அண்ணன் சூர்யாவின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு கதாநாயகிகளுடன், சூர்யா நடிபதால் மேலும் இந்த படம் குறித் ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.
