எங்க வீட்டு மாப்பிள்ளை

பிக்பாஸுக்கு பிறகு அதிகமாக பேசப்படும் நிகழ்ச்சி என்றால் அது ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை தான்.இதில் முதலில் 16 பெண்கள் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டி வைக்கப்படும்.வெற்றி பெறும் போட்டியாளருடன் ஆர்யா தனியே மனம் விட்டு பேசுவார்.இப்படி இறுதியில் வெற்றி பெறுபவர் ஆர்யா கழுத்தில் மாலை சூடுவார். 

விவாகரத்து

இதில் தற்போது இரண்டு பேர் வெளியேறி விட்டனர்.மீதி இருக்கும் 14 பேரில் சுசைனா என்ற பெண் தான் விவாகரத்து ஆனவர் என்றும் தனக்கு மகன் இருக்கிறான் என்று கூறி ஆர்யாவை அதிர்ச்சியடைய வைத்தார்.ஆனால் ஆர்யாவோ அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.தற்போது அந்த பெண் போட்டியில் தொடர்கிறார்.

ஓரின சேர்க்கையாளர்

அடுத்து ஆர்யாவின் மனதை அதிகம் கவர்ந்த பெண் அகாதா மேக்னஸ்.இவர் தன்னை வீடியோ எடிட்டர் என்று கூறியிருந்தார்.ஆனால் இவர் பலான படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.ஆர்யாவுக்கு இவர் மேல் தனி ஈடுபாடு இருப்பது போல் தெரிகிறது.ஆனால் இவரை பற்றிய உண்மையான விஷயம் தெரிய வரும் போது ஆர்யா அதை எப்படி எடுத்து கொள்வார் என்று தெரியவில்லை.


குஹாசினி

இது இப்படி இருக்க இந்த லிஸ்ட்டில் மேலும் இரண்டு பெண்கள் இணைந்துள்ளனர்.அது வேறு யாருமல்ல முதல் சந்திப்பிலேயே ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்து டோக்கன் ஆஃப் லவ்வை பெற்றவர் குஹாசினி.இவர் தன் காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சோகம்

மேலும் ஆர்யாவை ஒருமையில் அழைக்கும் போட்டியாளர் அபர்நதி.இவரும் பலமுறை ஆர்யாவிடம் டோக்கன் ஆஃப் லவ்வை பெற்றிருக்கிறார்.இவருடைய காதலருடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.மேக்கும் அவரது காதலரே இந்த நிகழ்ச்சி வருவதற்காகவே அபர்நதி காதலை முறித்து கொண்டு விட்டதாக சோகமான பதிவுகளை போட்டு கொண்டு வருகிறார்.


எது எப்படியோ இதெல்லாம் ஆர்யாவுக்கு தெரியுமா இல்லை தெரிய வரும் போது அவருடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்