பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகர்களான டோராபாபு மற்றும் பரதேசி ஆகியோர் சொகுசு குடியிருப்பில், மேற்கொண்ட அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன் கிழமை அன்று, விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார மோசடிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து மாதவரம் பகுதியில் அந்த சொகுசு குடியிருப்புக்கு அடிக்கடி பல ஆண்கள் வந்து போவதை கண்காணித்து வந்த போலீசார், அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

அப்போது நான்கு பேர் பிடிபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவர் தொலைக்காட்சி நடிகர்கள் அடங்குவர். இவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.