ஷங்கரின் ‘2.0’ பட ட்ரெயிலர் வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் காலை 7 மணி முதலே களைகட்டத்தொடங்கியது. விழா துவங்கவிருப்பதென்னவோ பத்து மணிக்குத்தான் என்றாலும் குழப்பங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணமாகவும் காலை 7 முதல் 8 மணிக்குள் ஆஜராகும்படி பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், தமிழக பத்திரிகைகள் மட்டுமின்றி  அனைத்து தேசிய ஊடகங்களையும் அழைத்து விட்டு. சத்யம் தியேட்டரின் A AND B row ல் அடைஓரே நெருக்கடி.இதில் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை விட, பிரபலங்களை  பாதுகாப்பாக திரையரங்குக்குள் அழைத்துச்செல்ல  கொண்டுவரப்பட்டுள்ள  bouncerகள் எண்ணிக்கை இருமடங்காக இருக்கிறது.

வழக்கமாக ஸ்கிரீனுக்கு அருகே இடம் வழங்கப்படும் கேமராக்காரர்களுக்கு இம்முறை தியேட்டரின் கடைசியிலிருந்து துவங்கும் ‘ஏ’ வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ரஜினியை,ஷங்கரை, எமி ஜாக்‌ஷனை க்ளோசப்பில் எப்படி எடுப்பது என்று புலம்பிவருகிறார்கள் கேமராமேன்கள்.