‘தமிழன் என்று சொல்லடா’ குரூப் புல்லரிக்கும் படியாக, உலக சினிமா வரலாற்றில் பாகிஸ்தானில் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படம் ரிலீஸாகிறது. அது சாட்சாத் ஷங்கரின் ‘2.0’வே தான். வழக்கமாக இந்தியில் டப்பிங் ஆகும் தமிழ்ப்படங்கள் அப்படியே இந்தியிலேயே பாகிஸ்தானில் ரிலீஸாவது வழக்கம்.

ஆனால் இம்முறை இந்தி ‘2.0’ பிரிண்ட்களோடு, தமிழ்ப் பிரிண்டுகளும் வேண்டும். இங்கு நிறைய மக்கள் படத்தை தமிழில் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் என்று விநியோகஸ்தர்கள் மூலம் தகவல் வந்ததை ஒட்டி முதல் முறையாக ஒரு படம் பாக்கில் தமிழ் பேசவிருக்கிறது.

இத்தகவலை வெளியிட்டிருப்பவர் இந்தியில் இப்படத்தை வாங்கி வெளியிடும் கரண் ஜோகர். ‘இதற்கு முன் எத்தனையோ தமிழ்ப்படங்களின் இந்தி டப்பிங் பிரிண்டுகளை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்திருக்கிறேன். அங்கிருந்து தமிழ் பிரிண்ட் கேட்டிருப்பது இதுவே முதல் முறை’என்கிறார்.

பாகிஸ்தான் மக்களோட தமிழ் உணர்வைப் பாராட்டி சீக்கிரமே சீமான் அண்ணன்கிட்ட இருந்து ஒரு உணர்ச்சிவசமான அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.