சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கிய 2 .0 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது.

கிட்ட தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக படமாக்கப்பட்டு வந்த இந்த படம், ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.

இந்த படத்தில் லண்டன் நடிகை எமி ஜாக்சன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். லைக்கா நிறுவனம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

2 .0 திரைப்படம் வெளியாகி நல்ல கருத்துக்களை கொண்ட படம் என சமூக ஆர்வலர்களிடம் பாராட்டை பெற்றது. எனினும் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் கார்ட்டூன் படம் போல் சில இடங்களில் இருப்பதாக, ஒரு சிலர் விமர்சித்தனர். ஆனால் படம் விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. 2 . 0 படத்திற்கு 'ரிசர்ஜன்ஸ்' என பெயரிட்டு வெளியிடுகின்றனர். சீனாவிலும் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதாலும், இந்த படத்தின் கதை அவர்கள் விரும்ப தக்க வகையில் இருப்பதாலும் சீன ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.