பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ' 2 . o '. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர்.   

இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிக பிரமாண்டமாக லைகா நிறுவனத்தின் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் சினிமாஸில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக '2 . o ' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடல்களை, வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 

ஏற்கனவே  இந்த படத்தின் இரண்டு பாடல்கள் துபாயில் நடந்த பிரமாண்டமான விழாவில் வெளியான நிலையில் இன்று 3வது பாடல் ஒன்று இன்று வெளியாகவுள்ளது. மறைந்த நா.முத்துகுமார் எழுதிய இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் மற்றும் ஷாஷா திரிபதி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலின் தெலுங்கு வடிவத்தை பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.