தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய நடிகர் அஜித்குமார். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த அஜித்திற்கு, "பில்லா" ரீமேக் மாஸ் ஓப்பனிங்காக அமைந்தது. இனி அஜித்தால் எழுந்து கொள்ளவே முடியாது என்று நினைத்தவர்கள் முன்பு "ஐ அம் பேக்" என செம்ம ஸ்டைலாக வந்து நின்றார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஸ்டைலிஷ் படத்தை எடுக்க முடியுமா? என திரையுலகமே வாய்பிளந்து நிற்கும் படி,  ஹாலிவுட் தரத்தில் "பில்லா" திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மாஸ் கொடுத்த "பில்லா", அஜித்திற்கும் செம்ம ஹிட்டாக அமைத்தது. 

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் என தேர்தெடுக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும், படத்திற்கு கச்சிதமாக பொருத்தினர். மலேசியாவில் செம்ம கிளாஸாக படமாக்கப்பட்ட "பில்லா", அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தியேட்டர்களில் "பில்லா" படத்தில் அஜித் தோன்றும் மாஸ் ஓப்பனிங் சீனைப் பார்த்து, ஆராவாரம் செய்த ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. 

இந்த படத்தில் நடித்த நயன்தாராவிற்கும் "பில்லா" படம் மாஸ் ஓப்பனிங்காக அமைந்தது. பில்லா படத்தில் பிகினியில் தோன்றிய நயன்தாராவை இன்றளவும் ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.  

கதை, வசனம், பின்னணி இசை, பாடல்கள், படமாக உருவாக்கப்பட்ட விதம் என அனைத்திலும் மாஸ் காட்டிய பில்லா திரைப்படம், வசூலிலும் உச்சம் தொட்டது. இந்த ஆண்டு "விஸ்வாசம்", 'நேர்கொண்ட பார்வை" என  அஜித் இரண்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களை கொடுத்திருந்தாலும், இன்றுடன் பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதற்காக டுவிட்டரில் #12YrsOfSovereignBILLA என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில் "பில்லா" படம் சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தல ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

 2007ம் ஆண்டு வெளியான "பில்லா" திரைப்படத்திற்கு பிறகு அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறார். ஆனால் பில்லாவில் அஜித்தின் மாஸ் ஸ்டைலிஷ் லுக் அவரை வேறு ஒருவராக மாற்றிக்காட்டியது. அப்படிப்பட்ட "பில்லா" படத்தை கொண்டாடும் விதமாக சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.