‘அசுரன்’படம் ரிலீஸாகும் அதே அக்டோபர் 4ம் தேதியே ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’படமும் ரிலீஸாவதால் இயக்குநர் வெற்றிமாறனும் தனுஷும் ஜீ.வி. மீது செம கடுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ரிலீஸ் குறித்த முடிவு எடுத்ததில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜீ.வி.

அக்டோபர் 27ம் தேதி தீபாவளி வருவதை ஒட்டி அதற்கு முன்பே சில முக்கிய படங்கள் ரிலீஸுக்காக கியூ கட்டி நிற்கின்றன. அதன்படி அக்டோபர்4 ம் தேதி தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ‘அசுரன்’படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். இப்படம் ஒரு சீரியஸான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதால் தனியாக ரிலீஸாகவேண்டுமென்று தனுஷ், மற்றும் படக்குழு விரும்பியுள்ளது.

இந்நிலையில் திடீரென அதே தேதிக்கு போட்டியில் குதித்துள்ளது ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள 100% காதல்’படம். தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் படு கிளுகிளுப்பான படமாகும். இளைஞர்கள் கூட்டம் இப்படத்துக்கே முக்கியத்துவம் தரும் என்று தனுஷ் கருதுவதுதான் டென்சனுக்குக் காரணம். ‘அசுரன்’படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷும் வெற்றிமாறனும் ‘100% காதல்’படமும் அதே அக்டோபர் 4ம் தேதி ரிலீஸாவது குறித்து வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் நேரில் சந்தித்து ரிலீஸ் தொடர்பாம முடிவில் தனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.