இந்தி  பிளாக்பஸ்டர், ‘பிங்க்’ ரீமேக்கான  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் தமிழில் ரீமேக்கில்  அமிதாப் நடித்த அட்வக்ட் ரோலில் தல அஜித் நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் அஜித்துக்கு  ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார் மேலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த மெகா பிளாக்பஸ்டர் படத்தை அஜித் கேட்டுக்கொண்டதால் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையில்  கடந்த மாதம் வெளியாகி டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

இதனைத் தொடர்ந்து 'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,தீ முகம் தான் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை வெளியானது.  

யார் இவன் தான்
ஓர் அடிதான் 
பார் இடிதான் 
நீ எதிரியா உதிரியா பதறியே வா 
இமைப்பதும் வெடி இவன் நெருக்கடி 

வா மோதிப்பாரு
அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு
வெள்ளைத்தாடி வெளிச்சம் அடிக்க
போய் எண்ணிப்பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எலும்ப
யார் இந்த ஆளு
இறங்கி பிடிப்பான் எதிரி நரம்ப

பிரிச்சு பிரிச்சு மேயுறான்
துரத்தித் துரத்தி வெளுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பத்தான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்
அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
புரட்டிப் புரட்டி எடுக்கிறான் 
பையில் புயலை அடைக்கிறான்... " யுவன்ஷங்கர் ராஜா இசையில் பா.விஜய் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.