டைடல் பார்க்கில் வேலை செய்பவர்களை விட  ஒண்ணாங்கிளாஸுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற நடிகை கஸ்தூரியின் கிண்டல் பதிவைத்தொடர்ந்து இன்று நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரும் கிண்டல் பதிவு ஒன்றைப்போட்டுள்ளார்.

"ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர்.மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் ...ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியீடு’ என்ற பதிவுக்குக் கீழே கமெண்ட் போட்டிருக்கும் எஸ்.வி.சேகர்...‏அரசு ஆசிரியர்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தகுதிதேர்வு வைத்து தகுயில்லாதவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்’என்று பதிவிட்டிருக்கிறார்.