Asianet News TamilAsianet News Tamil

#Metoo ஹாஷ்டேக்-ஐ நியாயமாக பயன்படுத்துங்கள்... சுதா ரகுநாதன்!

தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் குறித்து பெண்கள் துணிச்சலுடன் கூறி வருகின்றனர்; அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் இந்த ஹாஷ்டேக்-ஐ நியாயமாக பெற பயன்படுத்த வேண்டும் என்றும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.

#Metoo Hashtag Use reasonable...Sudha ragunathan
Author
Chennai, First Published Oct 15, 2018, 4:06 PM IST

தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் குறித்து பெண்கள் துணிச்சலுடன் கூறி வருகின்றனர்; அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும் என்றும் இந்த ஹாஷ்டேக்-ஐ நியாயமாக பெற பயன்படுத்த வேண்டும் என்றும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் கூறியுள்ளார். பெண்கள், தங்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் குறித்தவைகளை #metoo ஹாஷ்டேக் மூலம் கூறி வருகின்றனர். #Metoo Hashtag Use reasonable...Sudha ragunathan

இந்தியாவில் #metoo ஹாஷ்டேக் ஆதரவும் வலுத்து வருகிறது. வெளியுறவு துணை அமைச்சர் அக்பர் மீது #metoo ஹாஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறியதன் மூலம் பாஜகவில் பெரும் புயலை எழுப்பியுள்ளது. அக்பர் கைது செய்யப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், எம்.ஜே.அக்பர், தம் மீது பாலியல் புகார் கொடுத்தவர் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டை அடுத்து, வைரமுத்து மீது பலர் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். #Metoo Hashtag Use reasonable...Sudha ragunathan

இந்த நிலையில், பாடகி சின்மயி-ன் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும், நல்லவனா? கெட்டவனா? என்பதை நீதிமன்றம் நிரூபிக்கட்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார். வைரமுத்து மட்டுமல்லாத கர்நாடக இசைகலைஞர்கள் சிலர் மீதும் பாடகி சின்மயி புகார் கூறியிருந்தார். இந்த நிலையில், கர்நாடக இசைக் கலைஞர்கள் மீடூ-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் இணைந்து #Carnaticmetoo மனு ஒன்றை தயாரித்துள்ளனர். அந்தமனுவில், 200 கலைஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். #Metoo Hashtag Use reasonable...Sudha ragunathan

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க சபாக்களில் நிர்வாக ரீதியான அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக கலைஞர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதன், பெண்கள் தங்களது துயர கதைகள் குறித்து துணிச்சலுடன் கூறுகின்றனர். அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இந்த ஹாஷ்டேக்-ஐ நியாயம் பெற மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios