நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.இப்படத்தினை 'லைகா' நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த நிலையில் தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் தர்பார் எங்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாகச் சொல்லி இயக்குனர் முருகதாஸ் வீடு அலுவலகத்திற்கு சென்று போராட்டம் நடத்தினார்கள் விநியோகஸ்தர்கள்.

T.Balamurukan

முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்.., “கடந்த 2001ம் ஆண்டு நான் தமிழ் திரைப்படவுலகில் அறிமுகமாகி பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறேன். லைகா நிறுவனம் தயாரித்த தர்பார் படத்தினையும் இயக்கி இருக்கிறேன். இந்த படத்தின் வினியோக உரிமைகளில் நான் தலையிடவே இல்லை. இருந்த போதிலும் பிப்ரவரி 3ம் தேதி வினியோகஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் தேனாம்பேட்டையில் உள்ள எனது அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வந்து முழக்கங்களையும் எழுப்பினார்கள். இதனால் என்னுடைய பணியாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். என்னுடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். இதை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள்.இதனால், எனது அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், முருகதாஸ் நான் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்திருந்தார். இதையெல்லாம் பார்த்த நீதிமன்றம் “ நீங்கள் விருப்பப்படும் வகையில் நீதிமன்றம் செயல்பட வேண்டுமா? என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததோடு அந்த வழக்கையும் முடித்து வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.