Asianet News TamilAsianet News Tamil

’2.0’ கர்நாடகா ரிலீஸ்... வாட்டாள் நாகராஜுக்கு சென்ற கமிஷன் தொகை எவ்வளவு தெரியுமா?

கர்நாடகாவில் ‘2.0’ படத்தை ரிலீஸ் பண்ணவிடமாட்டேன் என்ற வாட்டாள் நாகராஜின் வாயை அப்படத்தின் கர்நாடக உரிமையை வாங்கிய விநியோகஸ்தர் கப்பென அடைத்துவிட்டதாக தகவல்கள் நடமாடுகின்றன.

'2.0' karnataka release issue solved
Author
Chennai, First Published Nov 23, 2018, 11:57 AM IST

கர்நாடகாவில் ‘2.0’ படத்தை ரிலீஸ் பண்ணவிடமாட்டேன் என்ற வாட்டாள் நாகராஜின் வாயை அப்படத்தின் கர்நாடக உரிமையை வாங்கிய விநியோகஸ்தர் கப்பென அடைத்துவிட்டதாக தகவல்கள் நடமாடுகின்றன.'2.0' karnataka release issue solved

வரும் 29ம் தேதி உலகமெங்கும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘2.0’ படத்துக்கு கர்நாடகாவில் மட்டும் வாட்டாள் நாகராஜ் மூலமாக சிறு பஞ்சாயத்து இருந்தது. ’கன்னடப் படங்களின் வசூலை ‘2.0’ பாதிக்கும் என்பதால் கர்நாடகாவில் ஒரு தியேட்டரில் கூட படத்தைத் திரையிடவிடமாட்டோம்’ என்று வாய்ச்சவடால் விட்டிருந்தார்.

இதுகுறித்து ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘வாட்டாள் நாகராஜ் பிரச்சினையை கர்நாடக அரசு பார்த்துக்கொள்ளும்’ என்று அவரை சற்றும் பொருட்படுத்தாமல் பதிலளித்திருந்தார்.'2.0' karnataka release issue solved

இந்நிலையில் கடும்போட்டிக்கு மத்தியில் ‘2.0’ படத்தின் கர்நாடக உரிமையை ரூபாய் 20 கோடிக்கு, ஏற்கனவே ‘பாகுபலி’ படத்தை வாங்கிய  சுதீப் என்னும் பிரபல விநியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இந்தத் தொகையில் சுமார் பத்து சதவிகிதம் வரை வாட்டாள் நாகராஜுக்கு செல்லும் என்பதால் அவர் பட ரிலீஸுக்கு எந்தத்தொல்லையும் கொடுக்கமாட்டார் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.

Follow Us:
Download App:
  • android
  • ios