TNCSC Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) 240 பருவகால பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு. எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC), செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள 240 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது இந்த அறிவிப்பின் சிறப்பம்சமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

TNCSC Recruitment 2025: பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதிகள்

இந்த அறிவிப்பின்படி, மூன்று முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

• பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk): இந்த பதவிக்கு 80 காலியிடங்கள் உள்ளன. இதற்கு பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) அல்லது இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

• பருவகால உதவுபவர் (Seasonal Helper): இந்த பதவிக்கு 80 காலியிடங்கள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

• பருவகால காவலர் (Seasonal Watchman): இந்த பதவிக்கு 80 காலியிடங்கள் உள்ளன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் மற்றும் வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி சம்பளம் மற்றும் சலுகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பட்டியல் எழுத்தர் பணிக்கு மாதம் ₹5,285+ DA மற்றும் பணி நாட்களுக்கு ₹120 போக்குவரத்துப் படியும், உதவுபவர் மற்றும் காவலர் பணிக்கு மாதம் ₹5,218+ DA மற்றும் பணி நாட்களுக்கு ₹120 போக்குவரத்துப் படியும் வழங்கப்படும். வயது வரம்பைப் பொறுத்தவரை, SC & SCA/ST பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும், BC/BC(M)/MBC பிரிவினருக்கு 18 முதல் 34 வயது வரையும், OC பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியத் தேதிகள்

இந்த வேலைவாய்ப்புகளுக்கு எந்தவித விண்ணப்பக் கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்கள் நேரடியாக நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படும். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள், செப்டம்பர் 17, 2025 முதல் அக்டோபர் 7, 2025 வரை விண்ணப்பிக்கலாம். காலக்கெடுவிற்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, நேர்காணலுக்குத் தயாராவது அவசியமாகும்.