எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம், பெரும்பாலான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம், பெரும்பாலான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த பட்டதாரி அளிவிலான தேர்வு, 2022(நிலை-1)-க்கான அறிவிப்பு வரும்‌ செப்டம்பர்‌ மாதம்‌ 10 ஆம்‌ தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..

மேலும் இந்த தேர்விற்கு இணையதளம்‌ மூலம்‌ அக்டோபர்‌ 1 ஆம்‌ தேதி வரை விண்ணப்பங்கள்‌ பெறப்படும் என்றும் எழுத்துத்‌ தேர்வு இந்தாண்டு டிசம்பர்‌ மாதம்‌ நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுபோல, ஒருங்கிணைந்த மேல்நிலை(10, +2) அளவிலான தேர்வு(முதல்‌ நிலை) 2022-க்கான அறிவிப்பு வரும்‌ நவம்பர்‌ மாதம்‌ 5 ஆம்‌ தேதி வெளியிடப்படும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் டிசம்பர்‌ 4 ஆம்‌ தேதி வரை பெறபப்டும் என்றும் எழுத்து தேர்வானது அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு!! பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. முழு விபரம்..

இது தவிர இளநிலை பொறியாளர்‌ (முதல்‌ தாள்‌) தேர்வு, 2022-க்கான அறிவிப்பு வரும்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ 12 ஆம்‌ தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர்‌ மாதம் வரை அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கான எழுத்துத்‌ தேர்வு 2022 நவம்பர்‌ மாதம்‌ நடைபெறும்‌ என்று குறிப்பிடபப்ட்டுள்ளது. இதனிடையே, காவலர்‌ நிலையிலான பணிகளுக்கான அறிவிப்பு (மத்திய ஆயுதக்‌ காவல்படை, அசாம்‌ ரைபிள்‌) வரும்‌ டிசம்பர்‌ மாதம்‌ 10 ஆம்‌ தேதி வெளியிடப்படும்‌. 2023 ஜனவரி 19 ஆம்‌ தேதி வரை இணையதளம்‌ மூலம்‌
விண்ணப்பிக்கலாம்‌. 2023 மார்ச்‌-ஏப்ரல்‌ மாதங்களில்‌ எழுத்து தேர்வு நடைபெறும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்.. நியமனம் எப்போது.?