அரசுப்பள்ளிகளில் காலியாக 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.50 லட்சம் விண்ணப்பத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசுப்‌ பள்ளிகளில்‌ உள்ள 13,331 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. ‌ அதன் படி, பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் ஆசியர்களை நியமிக்க உத்தரவு வழங்கியது. இவ்வாறு நியமிக்கப்படும் உள்ளன. இப்பணியிடங்களில்‌ தொகுப்பூதியமாக இடைநிலை ஆசிரியருக்கு மாதம்‌ ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000, முதுநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மதிப்பூதியம்‌ வழங்கப்படும்‌ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர் பணிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? பள்ளிக்கல்வித்துறை தகவல்!!

இதனைதொடர்ந்து தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் உத்தரவை ரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனால் அதன்‌ எல்லைக்குட்பட்ட 14 மாவட்டங்கள்‌ தவிர்த்து எஞ்சிய பகுதிகளில்‌ ஆசிரியர்‌ பணிநியமனத்தை நடத்திட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்டு வருகிறது.

தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம்‌ அறிவுறுத்தலின் படி, தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, புதிய வழிக்காடு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னூரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, வேலூர்‌ உள்பட 24 மாவட்டங்களில்‌ தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 4 முதல்‌ 6-ஆம்‌ தேதி வரை மாவட்டக்கல்வி அலுவலகங்கள்‌ வாயிலாக நடைபெற்றது. 

மேலும் படிக்க:கவனத்திற்கு!! தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.. முழு விபரம்

இந்நிலையில் இந்த மாவட்டங்களில்‌ உள்ள காலியிடங்களுக்கு 1.50 லட்சத்துக்கும்‌ மேற்பட்ட பட்டதாரிகள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. இந்த விண்ணப்பங்கள்‌ இவற்றை சார்ந்த பள்ளிகளுக்கு அனுப்பி கூர்ந்தாய்வு செய்வதற்காக பணிகள்‌ நடைபெற்று வருவதாக பள்ளிக்‌ கல்வித்‌ துறை அதிகாரிகள்‌ தெரிவித்தனர்‌.