சூப்பர் அறிவிப்பு.. ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் (JIPMER) காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Puducherry JIPMER Recruitment Notification 2022

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் ஜவஹர்லால்நேரு பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இதனை சுருக்கமாக ஜிப்மர் (JIPMER) என்றழைக்கப்படுகிறது. இங்கு இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு மருத்துவப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். மேலும் இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. 

காலி பணியிடம் மற்றும் சம்பளம்: 

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Tutor in Speech Pathology & Audiology பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுடையவர்கள் விண்ணப்பக்காலம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஒருங்கிணைந்த ஊதியத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு கல்வி நிலையத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்( Speech & Language Pathology or Audiology Post Graduate) . இல்லையெனில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் (Speech & Language Pathology or Audiology) என்று கூறப்பட்டுள்ளது.  தமிழ் அறிவு இருக்க வேண்டுமெனவும் 3 வருடம் ஆசிரியராக பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு மற்றும் தேர்வு முறை: 

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் தேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். அடுத்த மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க:இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்..

விண்ணப்பிக்கும் முறை: 

முதலில் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jipmer.edu.in செல்ல வேண்டும். அதில் JIJIPMER Jobs Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு விண்ணப்ப படிவத்தை எந்த தவறு இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்ற செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இரண்டு முறையில் விண்ணிப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Shri Hawa Singh, 
Senior Administrative Officer, 
Room No. 210, II floor, 
Administrative Block, 
JIPMER, 
Puducherry 605006

மேலும் படிக்க:மாதம் ரூ.58,100 சம்பளம்.. 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

பதிவு கட்டணம்: 

பொது பிரிவு மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள் பதிவு கட்டணமாக ரூ.250 யை செலுத்த வேண்டும்.  மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios