இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்..
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன. எனவே இதற்கு தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன. எனவே இதற்கு தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான விண்ணப்பங்களை அலுவகத்திலோ அல்லது https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அடுத்த மாதம் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் ரூ.15,000 யிலிருந்து ரூ.65,000 வரை சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் படிக்க:தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இறைநம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் 626202.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
காலியா உள்ள அனைத்தும் பணியிடங்களுக்கும் தனித்தனியாக நேர்முகத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்படும். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மேலும் படிக்க:பயணிகளே அலர்ட் !! மெட்ரோவில் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டாம்.. 20% தள்ளுபடி.. அறிமுகமான புதிய வசதி..