Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்... முழு விவரம் உள்ளே!!

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in central govt and here the details about how to apply
Author
First Published Mar 26, 2023, 7:05 PM IST | Last Updated Mar 26, 2023, 7:05 PM IST

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

காலிப்பணியிடங்கள்:

  • மொத்தம்: 5,369 
  • இதில் 100 வகைமைகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 வகைமைகள் (10+2 Higher Secondary ) மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

விண்ணப்பிப்பது எப்படி?

  • ssc.nic.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: 

  • இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். 
  • அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: EPFO-வில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

கடைசி தேதி: 

  • விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. இன்று நள்ளிரவு 11 மணி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தேர்வு செயல்முறை: 

  • கணினி மூலம்  நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். 
  • தெற்கு மண்டலத்தில் கணினி மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு 2023 ஜுன் - ஜுலை மாதங்களில், 22 மையங்களில் / நகரங்களில் நடைபெறுகிறது. 
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11 மையங்ளிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 இடங்களிலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறுகின்றன. 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios