EPFO-வில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO)-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in employees provident fund organisation

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO)-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பணிகள்: 

  • சமூக பாதுகாப்பு உதவியாளர் 
  • சுருக்கெழுத்து தட்டச்சர் 

காலிப்பணியிடங்கள்:

  • சமூக பாதுகாப்பு உதவியாளர் - 2674
  • சுருக்கெழுத்து தட்டச்சர் - 185

மொத்தம் - 2674

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

சமூக பாதுகாப்பு உதவியாளர்: 

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  • மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம்:

  • ரூ. 29,200 – 92,300

சுருக்கெழுத்து தட்டச்சர்: 

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
  • மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவுகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பள விவரம்:

  • ரூ. 25,500 – 81,100

இதையும் படிங்க: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5000 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

தேர்வு செய்யும் முறை: 

  • இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு விவரம்: 

  • எழுத்துத் தேர்வில் கணிதம், திறனறிதல், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். 
  • தேர்வு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். 
  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://recruitment.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 

  • 28.04.2023
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios