புதுச்சேரியில் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  பெண்கள் py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

சூப்பர் சான்ஸ் பெண்களுக்கு! உடனே அப்ளை பண்ணுங்க!

புதுச்சேரியில் அங்கன்வாடியில் 600க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வெளியான அறிவிப்பு பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சிறந்த வாய்ப்பாகவே இருக்கும்.

மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 திட்டத்தின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 344 இடங்களும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 274 இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த இரண்டு பணிகளுக்குமே பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண்கள் இதற்கு தகுதியானவர்கள் இல்லை. இதில், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளத்தை பொறுத்தவரை, அங்கன்வாடி பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.6000, உதவியாளர் பணிக்கு ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்

அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Py.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்தும், தேவையான ஆவணங்கள சமர்ப்பித்தும் விண்ணப்பிக்க வேண்டும். வேலைு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் டிசம்பர் 22ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9786444507, 09791858504, 8525000778, 9000158100 என்ற தொலைபேச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.