MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Govt Job Vacancy: 2 ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு வேலை காத்திருக்கு .! இன்று முதல் Apply செய்யலாம்.! மறக்காதீங்க.!

Govt Job Vacancy: 2 ஆயிரம் பேருக்கு தமிழ்நாடு அரசு வேலை காத்திருக்கு .! இன்று முதல் Apply செய்யலாம்.! மறக்காதீங்க.!

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) 2147 துணை செவிலியர் மருத்துவச்சி (ANM) / கிராம சுகாதார செவிலியர் (VHN) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. இது சுகாதாரத்துறையில் நிரந்தர அரசு வேலை தேடும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 24 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
நிரந்தர பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்
Image Credit : Social media

நிரந்தர பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) 2025ஆம் ஆண்டிற்கு 2147 Auxiliary Nurse Midwife (ANM) / Village Health Nurse (VHN) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு எண் 10/MRB/2023 என்பதன் கீழ் வெளியாகியுள்ள இந்த அரசு வேலை வாய்ப்பு, சுகாதாரத்துறையில் நிரந்தர பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். 

இன்று முதல் விண்ணப்பிக்கனும்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24.11.2025 முதல் 14.12.2025 வரை MRB-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான **www.mrb.tn.gov.in**-ல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், தங்களின் தகுதி மற்றும் தேவையான கல்வித் தகுதிகளை சரிபார்த்து அறிவிப்பை முழுமையாகப் படிப்பது அவசியம்.

22
பதிவு சான்றிதழும் கட்டாயம்
Image Credit : AI generated

பதிவு சான்றிதழும் கட்டாயம்

இந்த ANM/VHN பணியிடங்களுக்கு +2 தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இரண்டு ஆண்டு கால MPHW (Female) அல்லது Auxiliary Nurse Midwifery (ANM) பயிற்சி பெற்றிருக்க வேண்டும். Tamil Nadu Nurses and Midwives Council வழங்கிய பதிவு சான்றிதழும் கட்டாயம். முகாம்களில் பணியாற்ற உடல் தகுதி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பில் OC விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 42 வயது வரை தகுதி உள்ளது. ஆனால் SC, ST, BC, MBC போன்ற ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 

சம்பளம் இதுதான்

முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen) தனிப்பட்ட வயது சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கான சம்பளம் Level-8 : ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். தேர்வு முறை எந்தத் தேர்வும் இல்லாமல், விண்ணப்பதாரர்களின் கல்வி மதிப்பெண்களை அடிப்படையாக கொண்ட Merit List மற்றும் ஆவண சரிபார்ப்பின் மூலம் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் SC, ST, SCA, DAP (PH), DW ஆகியோருக்கு ரூ.300 ஆகவும், பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

2 ஆயிரம் பேருக்கு மேல் வேலை

மொத்தம் 2147 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதார சேவைக்கு இது ஒரு பெரிய பணியாளர் சேர்க்கையாக அமைகிறது. அரசு மருத்துவத்துறையில் பணிபுரிந்து மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய விரும்பும் அனைத்து தகுதியான பெண்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்க தவறாதீர்கள்; MRB பற்றிய அடுத்தடுத்த புதுப்பிப்புகளைக் கண்டறிவதற்காக அதிகாரப்பூர்வ தளத்தை தொடர்ந்து பார்வையிடுவது பயன்படும்.

Related Articles

Related image1
Job Alert: Auto CAD தெரிஞ்சா போதும், சுளையா ரூ.50,000 சம்பளம்.! ஆஹா அல்வா சான்ஸ்.!
Related image2
Job Vcancy: 10th முடிச்சவங்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்.! செம சான்ஸ்.!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Job Alert: Auto CAD தெரிஞ்சா போதும், சுளையா ரூ.50,000 சம்பளம்.! ஆஹா அல்வா சான்ஸ்.!
Recommended image2
Job Vcancy: 10th முடிச்சவங்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்.! செம சான்ஸ்.!
Recommended image3
தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டம் 2025? வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? - பகீர் பின்னணி!
Related Stories
Recommended image1
Job Alert: Auto CAD தெரிஞ்சா போதும், சுளையா ரூ.50,000 சம்பளம்.! ஆஹா அல்வா சான்ஸ்.!
Recommended image2
Job Vcancy: 10th முடிச்சவங்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.80 ஆயிரம் வரை சம்பளம்.! செம சான்ஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved