இந்திய கடலோர காவல்படை சென்னை பிராந்தியத்தில் 2025ஆம் ஆண்டுக்காக 14 குரூப்–C காலியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஸ்டோர் கீப்பர், எஞ்சின் டிரைவர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடலோர காவல்படையில் சென்னையில் வேலை
இந்திய கடலோர காவல்படை சென்னை பிராந்தியத்தில் மொத்தம் 14 குரூப்–C காலியிடங்கள் 2025ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வி முடித்த இளைஞர்கள் முதல் அனுபவம் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் வரை பல்வேறு தகுதிகளைக் கொண்டவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். நாட்டின் பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் வாய்ப்பாக இந்த அறிவிப்பு பலரின் கவனத்தைக் கவர்கிறது.
எத்தனை பேரக்கு வேலை இருக்கு தெரியுமா?
இந்த 14 பணியிடங்களில் ஸ்டோர் கீப்பர், எஞ்சின் டிரைவர், லாஸ்கர், சிவில் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர், பியூன் மற்றும் வெல்டர் போன்ற பதவிகள் அடங்குகின்றன. ஸ்டோர் கீப்பர் பதவிக்கு 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தகுதி போதுமானதாகும். குறிப்பாக எஞ்சின் டிரைவர் மற்றும் லாஸ்கர் போன்ற தொழில்நுட்ப பணிகளுக்கு 2–3 ஆண்டுகள் அனுபவம் அவசியமாக உள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பும் பதவிப்படி மாறுபடுகிறது. சில பணிகளுக்கு 18–25 வயது வரம்பாக இருக்க, எஞ்சின் டிரைவர் போன்ற சில பணிகளுக்கு 18–30 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமும் பதவிக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக எஞ்சின் டிரைவர் பதவிக்கு ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை உயர்ந்த சம்பள நிலை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தேர்வு முறை எழுதுதல், திறன் சோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
தேதி தெரியுமா?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும். முகவரி: Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai – 600009. கடைசி தேதி 29 டிசம்பர் 2025 என்பதால், விண்ணப்பத்தை முன்கூட்டியே தயார் செய்து அனுப்புவது நல்லது. கல்வித் தகுதி குறைவாக இருந்தாலும், அரசு நிரந்தர பணியில் சேரும் சிறந்த வாய்ப்பாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
சென்னையில் வேலை மாமு!
சென்னையில் நேரடி பணியமர்வு கிடைப்பதால், உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு இது மிகப் பெரிய நன்மையாக இருக்கும். அரசு பாதுகாப்புத்துறையில் பணிசெய்வதால் கிடைக்கும் வேலைநிலைத்தன்மை, ஊதியம், சலுகைகள், மேல்நிலை உயர்வு போன்ற பல நன்மைகளும் இந்த வேலைவாய்ப்பை சிறப்பாக்குகின்றன. தகுதியானவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் அனுபவத் தகவல்களை சரியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 நவம்பர் 23 அன்று புதுப்பிக்கப்பட்டது.


