12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

ஐஓசிஎல் நிறுவனத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

IOCL Southern Region Recruitment Notification 2022 Junior Operator Vacancies apply online

ஐஓசிஎல் தெற்கு பகுதிக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜூனியர் ஆபரேட்டர் பணிகளுக்கான காலி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலையில் சேர் குறைந்தபட்ச கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு அல்லது பட்ட படிப்பு முடித்து இருப்பது அவசியம் ஆகும். இந்த பணியில் சேர்வோர் புதுச்சேரியில் பணியாற்ற வேண்டி இருக்கும். தகுதியுடைவோர் மற்றும் திறமை மிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் படிக்க: உளவுத்துறையில் அதிகாரியாகனுமா? 786 பணிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்...!

வேலை வாய்ப்பு விவரங்கள்:

ஐஓசிஎல் எஸ்.ஆர்.
ஜூனியர் ஆபரேட்டர்
12 ஆம் வகுப்பு, பட்ட படிப்பு
புதுச்சேரி 
எழுத்துத் தேர்வு
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
மொத்த காலி இடங்கள் - 39
விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூலை 29

மேலும் படிக்க: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

ஐஓசிஎல் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கான வயது வரம்பு:

- பொதுப் பிரிவு மற்றும் EWS பிரிவு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்து செய்து இருக்க வேண்டும். அதிகபட்சம் 26 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.  

- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 05 ஆண்டுகள் வரையிலும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வரை தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க: கன்னியாகுமரியில் அலுவலக உதவியாளர் பணி - உடனே விண்ணப்பிக்க இதை செய்தாலே போதும்...!

கல்வித் தகுதி:

பொது, EWS மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

கனரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

வயது, கல்வித் தகுதி, சாதி, அனுபவம் உள்ளிட்டவைகளுக்கான ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை Jpg அல்லது PDF வடிவில் வைத்திருக்க வேண்டும். 

ஆன்லைனில் இந்த வேலைக்காக பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 29 ஆம் தேதி இரவு 10.00 மணி ஆகும். 

வேலை வாய்ப்பு தொடர்பான சந்தேகங்களை mktsrorecruit@indianoil.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது  044-28339172/9219 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்கலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios