உளவுத்துறையில் அதிகாரியாகனுமா? 786 பணிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்...!
மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புலனாய்வு துறையில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகள் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் படி மத்திய புலனாய்வு அதிகாரி, செக்யுரிட்டி அசிஸ்டண்ட், ஜூனியர் இண்டெலிஜன்ஸ் ஆபீசர் போன்ற பணிகளில் சேர 750-க்கும் அதிக காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட பதவிகளில் சேர ஆர்வம் மற்றும் தகுதி உடைய விண்ணப்பதாகக்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 19 ஆம் தேதி ஆகும்.
மேலும் படிக்க: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணிகளுக்கான பதவிக்காலம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த பதவிகளின் எண்ணிக்கை தற்காலிகமானது ஆகும். தேர்வின் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வாய்ப்புகள் உண்டு. இந்த பணிகளுக்கானக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படும் வாய்ப்புகளும் உண்டு.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் அலுவலக உதவியாளர் பணி - உடனே விண்ணப்பிக்க இதை செய்தாலே போதும்...!
தகுதி:
மத்திய காவல் அமைப்புகள், மாநில காவல் துறை அமைப்புகள் அல்லது பாதுகாப்பு படை அதிகாரிகள், பெற்றோர் கேடர் அல்லது துறைகளில் தொடர்புடைய அனுபவம் கொண்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு பதவிகளுக்கும் அதன் அடிப்படையில் சில தகுதிகளும் உள்ளன.
மேலும் படிக்க: NEET UG 2022 ADMIT CARD: நீட் 2022 ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு
புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு பதவி நிலைகளுக்கு ஏற்ப சம்பள அளவுகோள் உள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி -I 8 ஆம் நிலைக்கு 7 -ஆவது CPC-இன் படி மாதம் ரூ. 47 ஆயிரத்து 600-இல் இருந்து அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி மத்திய புலனாய்வு அதிகாரி -II / எக்சிகியூடிவ் நிலை 3 பதவிகளுக்கு மாதம் ரூ. 21 ஆயிரத்து 700-இல் இருந்து ரூ. 69 ஆயிரத்து 100 வரை சம்பளம் கிடைக்கும்.
ஜூனியர் இண்டெலிஜன்ஸ் ஆபீசர்-I மோட்டார் டிரான்ஸ்போர்ட் 7 ஆவது CPC-இன் படி மாதம் ரூ. 2 ஆயிரத்து 800 ரத ஊதியத்துடன் ரூ. 5 ஆயிரத்து 200 முதல் ரூ. 20 ஆயிரத்து 200 வரை சம்பளம் பெற முடியும். செக்யுரிட்டி அசிஸ்டண்ட் நிலை 3-க்கு 7 ஆவது CPC-இன் படி மாதம் ரூ. 21 ஆயிரத்து 700 முதல் ரூ. 69 ஆயிரத்து 100 வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிக்கு ஏற்ப சம்பள அளவுகோள் வேறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ள அதிகாரிகள் பயோ-டேட்டாவை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பதாரர் கையொப்பம் இட்டு, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சி சான்றிதழ்களின் சான்று அளிக்கப்பட்ட நகல்கள் உடன் உதவி இயக்குனர் ஜி3, உளவுத் துறை பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ்.பி. மார்க், பாபு தாம், புதுடெல்லி 110021 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைக்கு உட்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.