இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 

Indian Bank Chennai Recruitment 2022 Application Chief Risk Officer Post

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள Chief Risk Officer (CRO) பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளம் - indianbank.in சென்று விண்ணப்பிக்க முடியும். 

மேலும் படிக்க: கன்னியாகுமரியில் அலுவலக உதவியாளர் பணி - உடனே விண்ணப்பிக்க இதை செய்தாலே போதும்...!

சென்னையை தலைமை இடமாக கொண்ட இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (CRO) பதவிக்கு ஒரு பணி இடம் காலியாக உள்ளது. இந்த பதவியில் வேலைக்கு சேர விரும்புவோர் 01.07.2022 தேதி படி குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை படிக்கலாம். 

மேலும் படிக்க: NEET UG 2022 ADMIT CARD: நீட் 2022 ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு

கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை:

பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் தகுதி உள்ளவர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். முதற்கட்டமாக பணியில் விரும்புவோரின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன் பின் நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

மேலும் படிக்க: நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 1000 ஆகும். விண்ணப்பதாரர்கள் ஜூலை 19 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. 

விண்ணப்பிக்கும் முறை:

- முதலில் விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ வலைதளம் செல்ல வேண்டும்.

- வலைதளத்தின் மெனு பாரில் career/recruitment ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிக்கையை (official notification) டவுன்லோட் செய்து, முழுமையாக படிக்க வேண்டும்.

- எந்த விதமான பிழையும் இன்றி விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

- இறுதியில் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios