கன்னியாகுமரியில் அலுவலக உதவியாளர் பணி - உடனே விண்ணப்பிக்க இதை செய்தாலே போதும்...!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு ஆட் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்கணட் பணி இடங்களை இன சுழற்சி முறையில் பூர்த்தி செய்ய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை http://www.kanniyakumari.nic.in/ வலைதள முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க: NEET UG 2022 ADMIT CARD: நீட் 2022 ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு
விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 18 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் 629171 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க: நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
அலுவலக பணியாளர் மொத்த காலி இடங்கள் 03
இன சுழற்சி முறை
SC(A) W (DW) ஆதிதிராவிடர் (அருந்ததியர்)
பெண் (ஆதரவற்ற விதவை) 1
MBC & DNC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - o1
BC (other than muslim) பின்படுத்தப்பட்ட இனத்தவர் (முஸ்லிம்கள் தவிர) - 01
மேலும் படிக்க: க்ரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இதை மட்டும் தெரிஞ்சுகோங்க...!
இரவு காவலர் - மொத்த காலி இடங்கள் - 01
இன சுழற்சி முறை
SC(A) (W (DW)) ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (பெண் (ஆதரவற்ற விதவை)) - 1
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது.
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து நடைபெற இருக்கும் நேர்காணல் விவரம் பதவு அஞ்சல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நிபந்தனை விவரங்கள்:
1 - விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச் சான்று. முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்கான ஆதாரத்தை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
2 - இன சுறழ்சி, வயது மற்றும் கல்வி தகுதி கொண்ட நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
3 - விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.
4 - தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.
5 - எந்த விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவல வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் 629171 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் ஜூலை 18 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்து இருப்பது அவசியம் ஆகும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்து இருக்க வேண்டும்.
இந்த பணியில் சேர்வதற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்.
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022062435.pdf