NEET UG 2022 admit card: நீட் 2022 ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருப்பவர்கள் தேசிய தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அட்மிட் கார்டு-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தேசிய தேர்வு ஆணையமான (என்.ஐ.டி.) நீட் நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு-ஐ வெளியிட்டு உள்ளது. நீட் யு.ஜி. 2022 அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வதற்கான இணைய முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. நீட் யு.ஜி. 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டு உஎள்ளன. இந்த தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் படிக்க: நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
நீட் அட்மிட் கார்டு 2022 டவுன்லோட் செய்ய இணைய முகவரி - https://neet.nta.nic.in/
விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து நீட் அட்மிட் கார்டு-ஐ டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
நீட் யு.ஜி. 2022 தேர்வுகள் ஜூலை 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எழுத்துப்பூர்வமாக நடைபெற இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் நீட் அட்மிட் கார்டு 2022-ஐ தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு கடவுச்சொல் பதிவிட்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதும் போது ஆவணங்கள் சரிபார்ப்பின் போது நீட் அட்மிட் கார்டு-ஐ கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க: க்ரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இதை மட்டும் தெரிஞ்சுகோங்க...!
நீட் அட்மிட் கார்டு 2022-ஐ டவுன்லோட் செய்த பின் அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். ஒரு வேளை ஏதேனும் பிழை இருப்பின் உடனடியாக விண்ணப்பதாரர்கள் அட்மிஷன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
நீட் 2022 தேர்வு 13 மொழிகளில் நடைபெற இருக்கிறது. இதில் மருத்துவ படிப்புகளுக்கு 91 ஆயிரத்து 415 இடங்கள், பல் மருத்துவ துறையில் 26 ஆயிரத்து 949 இடங்கள், ஆயுஷ் துறையில் 52 ஆயிரத்து 720 இடங்கள், கால்நடை துறையில் 603 இடங்களுக்கு மாணவர்கள் சேர முடியும். நீட் தேர்வு மதிப்பெண்களை பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாடு முழுக்க நீட் தேர்வு 546 நகரங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. நீட் தேர்வு மதிம் 2.00 மணிக்கு துவங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.