இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Indo Tibetan Border Guard Recruitment Notification

இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அறிவுப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 186 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பதவி: 

  • கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு.
  • தலைமை கான்ஸ்டபிள் Head Constable (Motor Mechanic)
  • கான்ஸ்டபிள் Constable (Motor Mechanic)

மொத்த பணியிடங்கள்:

  •  186

இதையும் படிங்க: ராஜூவ் கொலை குற்றவாளிகள் விடுதலை பற்றி விமர்சித்த மாஜி ADSP அனுசுயாவுக்கு கொலை மிரட்டல்! பாஜக சொன்ன பகீர்.!

சம்பள விவரம்:

  • தலைமை கான்ஸ்டபிள் பணிக்கு 7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-4 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்பட உள்ளது. 
  • கான்ஸ்டபிள் பணிக்கு 7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்பட உள்ளது

கல்வித் தகுதி: 

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • சம்பந்தப்பட்ட துறை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பது சிறப்பு.

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே திமுக அலுவகம் முன்பு 85 வயது முதியவர் தீக்குளித்து தற்கொலை!!

விண்ணப்பிக்கும் முறை: 

  • விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.inஎன்ற லிங்க் மூலம்  ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.  
  • ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
  • தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் https://drive.google.com/file/d/1v7dZ-konv0ASdWmMfCtyRjqw5dvNgelH/view அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து காணவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்: 

  • விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios