Indian Railways Recruitment: இந்திய ரயில்வேயில் ஜூனியர் என்ஜினியர் உள்ளிட்ட 4098 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளத்தில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு முறை குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஜூனியர் என்ஜினியரிங் உள்ளிட்ட 4098 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மற்றும் சம்பளம் விவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்

இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் கெமிக்கல் மற்றும் உலோகவியல் உதவியாளர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் வொர்க்‌ஷாப், டிரக் மெஷின், டீசல் மெக்கானிக்கல், வெல்டர், சிவில், மெக்கானிக்கல், வெல்டர், டீசல் எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சூப்பிரண்டண்ட் உள்ளிட்ட 4098 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு

ஜூனியர் என்ஜினியர் - 18 வயது முதல் 33 வயது வரையிலும், டெபோட் மெட்ரியல் சூப்பிரண்டண்ட் - 18 முதல் 33 வரையிலும், கெமிக்கல்& உலோகவியல் உதவியாளர் - 18 வயது 33 வயது வரை இருக்க வேண்டும்.

வயது உச்ச வரம்பில் சலுகைகள்

அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

கல்வி தகுதி

பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ, பிஎஸ்சி பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மாதம் சம்பளம்

மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட கணினி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணமும்,தேர்வு எழுதிய பிறகு முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 13