இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 475 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம். ITI, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செப் 5, 2025 கடைசி தேதி.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தமிழ்நாட்டில் 475 அப்ரண்டிஸ் காலியிடங்களை அறிவித்துள்ளது. இது மத்திய அரசு வேலைவாய்ப்பாகும். இந்த அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8, 2025 முதல் செப்டம்பர் 5, 2025 வரை அவகாசம் உள்ளது.
கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் இட ஒதுக்கீடு!
இந்த அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க ITI, Diploma, Degree போன்ற கல்வித் தகுதிகள் அவசியம். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், PwBD (General/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள் மற்றும் PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் இல்லை, தேர்வு முறை என்ன?
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் மெரிட் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு அரிய வாய்ப்பு, ஏனெனில் பொதுவாக அரசு வேலைகளுக்கு எழுத்துத் தேர்வுகள் இருக்கும், ஆனால் இதற்குத் தேர்வு கிடையாது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் IOCL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
