இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைக்கு ரெடியா? 467 இடங்கள் காலி... உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பைப்லைன் பிரிவுகளில் 467 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பைப்லைன் பிரிவுகளில் 467 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அட்மிட் கார்டுகள் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படும். கணினி முறையில் தேர்வு (CBT) நடத்தப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை iocl.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 300 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST, PWD மற்றும் ESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அப்ளை பண்ணுங்க? வெற்றி பெற்றால் கைநிறைய சம்பளம், தனி கார்! வெற லெவல் லைஃப்!!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் ஜூலை 31, 2024 அன்று 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
காலிப் பணியிடங்கள்:
சுத்திகரிப்பு பிரிவுவில் 400 காலிப் பணியிடங்கள் உள்ளன. பைப்லைன் பிரிவுவில் 67 பணியிடங்கள் உள்ளன. இவை இரண்டும் நிர்வாகப் பணிகள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
கணினி தேர்வு (CBT) மற்றும் திறன் / நிபுணத்துவம் / உடற்தகுதித் தேர்வு (SPPT) ஆகியவை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி தேர்வு 100 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். தேர்வுக்கான நேரம் 120 நிமிடங்கள்.
தேர்வுத் தேதி:
கணினித் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நகரம் பற்றி சுமார் 15 நாட்களுக்கு முன்பு IOCL இணையதளம் மூலம் அறிவிக்கப்படும். தேர்வுக்கு சுமார் 7 நாட்களுக்கு முன்பு இ-அட்மிட் கார்டு கிடைக்கும்.
தேர்வு அறை கட்டுப்பாடுகள்:
தேர்வு அறைக்குள் மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாது. விண்ணப்பதாரர்கள் அட்மிட் கார்டின் பிரிண்ட் அவுட் மற்றும் அடையாளச் சான்றினை மட்டும் கொண்டுவர வேண்டும். மற்ற பொருட்கள் அனுமதிக்கப்படாது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்! நம்ம தமிழ் மொழி எந்த இடம் தெரியுமா?