Asianet News TamilAsianet News Tamil

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வேலை... எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?

294 காலி பணி இடங்களில் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்து இருக்கிறது. 

hpcl 2022 recruitment apply online for over 200 vacancies
Author
India, First Published Jun 30, 2022, 5:02 PM IST

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்ற பல்வேறு தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் சட்ட வல்லுனர் பிரிவுகளில் காலி பணி இடங்கள் உள்ளன. 294 காலி பணி இடங்களில் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்து இருக்கிறது. 

இதையும் படியுங்கள்: மாணவர்களுக்கு ரூ. 46 லட்சத்தில் வேலை.. என்.ஐ.டி. ரூர்கேலா அதிரடி...!

பணியின் பெயர்: மெக்கானிக்கல் என்ஜினியர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 193

கல்வித் தகுதி: மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: எலெக்ட்ரிக்கல் என்ஜினியர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 42

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினியர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: சிவில் என்ஜினியர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: சிவில் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: கெமிக்கல் என்ஜினியர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 07

கல்வித் தகுதி: கெமிக்கல் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆபீசர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 05

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி. என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்

பணியின் பெயர்: சேஃப்டி ஆபீசர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி: 

1 - மெக்கானிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் என்ஜினியரிங் பிரிவில் நான்கு ஆண்டு படிப்பை நிறைவு செய்து இருக்க வேண்டும்.

அல்லது

2 - சேப்டி ஆபீசராக பணியமர்த்தும் நோக்கில் மாநிலத்தின் பேக்டரி விதிகள் சார்ந்து நடத்தப்பட்ட இண்டஸ்ட்ரியல் சேப்டி பிரிவில் மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட டிகிரி அல்லது டிப்லோமா பெற்று இருக்க வேண்டும்.

3 - உள்ளூர் மொழி அறிந்து இருப்பது அவசியம் ஆகும்.

பணியின் பெயர்: ஃபயர் மற்றும் சேப்டி ஆபீசர்

காலி பணி இடங்கள் எண்ணிக்கை: 02

கல்வித் தகுதி: ஃபயர் மற்றும் சேப்டி பிரிவில் முழு நேர பி.இ. அல்லது பி.டெக் என்ஜினியரிங், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் அடங்கிய படிப்புகளில் முழு நேர டிப்லோமா பட்டம் பெற்று இருக்க வேண்டும். இந்த படிப்புகள் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு கால அளவை கொண்டிருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழகம் அல்லது மாநில, மத்திய தொழில்நுட்ப கல்வி அல்லது மாநில தொழில்நுட்ப கல்வி, இந்திய அரசு, லேபர் இன்ஸ்டிட்யூட் அல்லது செண்ட்ரல் லேபர் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்டவைகளில் பயின்று இருக்க வேண்டும். மராத்தி மொழி அறிந்து இருப்பதும் அவசியம் ஆகும்.

பணியின் பெயர்: குவாலிட்டி கண்ட்ரோல் அலுவலர்

காலி பணி இடங்கள் எண்ணிக்கை: 27

கல்வித் தகுதி: இரண்டு ஆண்டுகள் முழு நேர எம்.எஸ்.சி. கெமிஸ்ட்ரி (அனாலடிக்கல், பிசிக்கல், ஆர்கானிக், இன்-ஆர்கானிக்) 

இவை மட்டும் இன்றி மேலும் பல்வேறு பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த காலி பணி இடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம். 

தேர்வு முறை: காலி பணி இடங்களில் தகுதி உடையவர்களை தேர்வு செய்யும் முறை பலக்கட்டங்களை உள்ளடக்கியது ஆகும். இதில் கம்ப்யூட்டர் சார்ந்த பரீட்சை, க்ரூப் டாஸ்க், தனிப்பட்ட நேர்முக தேர்வு, மூட் கோர்ட் உள்ளிட்ட தேர்வு முறைகளை கொண்டது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

பணியில் சேர விரும்புவோர், https://www.hindustanpetroleum.com வலைதளம் சென்று விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஜூலை 22 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பி.டபிள்யூ.டி. தேர்வர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற பிரிவினர் திரும்ப பெற முடியாத ரூ. 1180 செலுத்த வேண்டும். (விண்ணப்ப கட்டணம் ரூ. 1000, ஜி.எஸ்.டி. ரூ. 180 மற்றும் பேமண்ட் கேட்வே கட்டணங்கள் தனி)

Follow Us:
Download App:
  • android
  • ios