மாணவர்களுக்கு ரூ. 46 லட்சத்தில் வேலை.. என்.ஐ.டி. ரூர்கேலா அதிரடி...!
பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்த சுமார் 20 மாணவர்களின் வருடாந்திர சம்பளம் ரூ. 46 லட்சத்து 08 ஆயிரம் ஆகும்.
ரூர்கேலா இந்திய தொழில்நுட்ப மையத்தில் 2022 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் அதன் முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறது. இந்த முறை பல்வேறு நிறுவனங்களில் பணியில் சேர்ந்த சுமார் 20 மாணவர்களின் வருடாந்திர சம்பளம் ரூ. 46 லட்சத்து 08 ஆயிரம் ஆகும். ரூர்கேலா இந்திய தொழில்நுட்ப மையத்தில் பயின்ற மாணவர்கள் யாரும் இது வரை இவ்வளவு சம்பளம் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: உங்களை உடனடி பணக்காரர் ஆக செய்யும் வேலை வாய்ப்புகள்.. இது மட்டும் தெரிந்தால் போதும்..!
வேலை வாய்ப்பு மட்டும் இன்றி மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்பும் கிடைத்து உள்ளன. மொத்தம் 403 மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதில் பல்வேறு மாணவர்களுக்கு மாதம் ரூ. 40 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலான ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: 100 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு... மாஸ் காட்டிய ஐஐடி மெட்ராஸ்...!
பி.டெக் படிப்பில் மட்டும் சுமார் பதினொரு துறைகளை சேர்ந்த 90 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மைனிங் துறை மாணவர்களில் 100 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. வேலை வாய்ப்பை உறுதி செய்வதில் இந்திய தொழில்நுட்ப மையம் அதன் முந்தைய சாதனையை முறியடித்து உள்ளது.
இதையும் படியுங்கள்: அக்னி பத் திட்டத்தின் கீழ் கடற்படையில் வேலை வாய்ப்பு..! எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?
இந்திய தொழில்நுட்ப மையம் ஒடிசாவில் 325 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் மொத்தம் 1274 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தன. இவர்களில் 138 மாணவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 20 லட்சம் வரை கிடைத்து இருக்கிறது.
“இந்த ஆண்டு வேலை வாய்ப்பு முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு கலந்து கொண்ட நிறுவனங்கள் மட்டும் இன்றி இந்த ஆண்டு கூடுதலாக 100 புதிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டன. இதில் ஆப்பிள், கூகுள் மற்றும் விசா போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும். இது மட்டும் இன்றி பொது துறை நிறுவனங்கள் ஆன பிபிசிஎல், கெயில், இ.ஐ.எல். மற்றும் பெல் உள்ளிட்டவையும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டன."
“ஒட்டு மொத்தத்தில் வேலை வாய்ப்பு சீசன் இந்த முறை மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. மேலும் முந்தைய ஆண்டு சாதனைகள் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டன. வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தின் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என இந்திய தொழில்நுட்ப மையம் ரூர்கேலா வேலை வாய்ப்பு வளர்ச்சி துறை தலைவர், பேராசிரியர் உமேஷ் சி பாட்டில் தெரிவித்தார்.