அக்னி பத் திட்டத்தின் கீழ் கடற்படையில் வேலை வாய்ப்பு..! எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் ஆட் சேர்ப்புக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.  ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்புக்கான பதிவுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

When to apply online to serve in the Indian Navy under the Agni Path Scheme

அக்னி பத் திட்டத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னி பத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும், 17 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.  அக்னி வீர் என்றழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அதில் இருந்து 25 % பேர் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.

100 சதவீத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு... மாஸ் காட்டிய ஐஐடி மெட்ராஸ்...!

ரயில்வே வாரியத்தில் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள்.. எழுத்து தேர்வு ஏதுமின்றி நியமனம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

 

When to apply online to serve in the Indian Navy under the Agni Path Scheme

இளைஞர்கள் போராட்டம்

இதற்க்கு  பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் உள்ளிட்ட இடங்களில் ரயில்களுக்கு தீ வைத்து சேதம் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது. மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி அறிவு இல்லாமல் இளைஞர்களின் நிலை கேள்விக்குள்ளாகும் என கூறப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பிரபல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் அக்னிபத் வீரர்களுக்கு பணி வழங்குவோம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதனால் ஏராளமான இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதில் கடற்படை, ராணுவம், விமானப்படை என 46 ஆயிரம் பதவி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Agnipath Recruitment 2022: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!

When to apply online to serve in the Indian Navy under the Agni Path Scheme

கடற்படை சேர வாய்ப்பு

தற்போது அக்னிவீருக்கான கடற்படை ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கிய விவரங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. www.joinindiannavy.gov.in என்ற இணைய தளத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேவி அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜூன் 25, 2022 அன்று வெளியிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்சேர்ப்புக்கான முக்கிய தேதியையும் அறிவித்துள்ளனர்.  அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2022 -க்கான விரிவான அறிவிப்பு ஜூலை 9, 2022 அன்று பகிரப்படும் என கூறப்பட்டுள்ளது.  இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 -க்கான பதிவுகள் ஜூலை 1, 2022 முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.  . கடற்படை ஆட்சேர்ப்பு 2022 -க்கான விண்ணப்ப சரிபார்த்தல்   ஜூலை 15 முதல் 30, 2022 வரை. நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு - அக்டோபர் மாதம்  நடைபெறும் என்றும்  நவம்பர் 21, 2022 முதல் மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையில் பணியில் சேரும் அக்னி வீரர்கள் 4 வருட பயிற்ச்சிக்கு பிறகு வணிக கடற்படையில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios