MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Internship Apply : DRDO-வில் இன்டர்ன்ஷிப்.. மாணவர்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை!

Internship Apply : DRDO-வில் இன்டர்ன்ஷிப்.. மாணவர்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை!

DRDO Internship 2026 : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO, மாணவர்களுக்காக புதிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.30,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : May 17 2026, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
DRDO வில் இன்டர்ன்ஷிப்
Image Credit : Asianet News

DRDO-வில் இன்டர்ன்ஷிப்

இன்றைய போட்டி உலகில் வெறும் டிகிரி மட்டும் போதுமானதாக இல்லை. நிறுவனங்கள் அனுபவமும் திறமையும் கொண்ட இளைஞர்களை தேடுகின்றன. இந்த சூழலில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ மாணவர்களுக்காக முக்கியமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது.

எந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்படும் டிஆர்டிஓ-வின் DEBEL ஆய்வகத்தில் இந்த இன்டர்ன்ஷிப் நடைபெறுகிறது. UGC அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொறியியல் அல்லது அறிவியல் பிரிவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தகுதிகள்:

  • பொறியியல் / அறிவியல் மாணவர்கள் மட்டும்
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரி அவசியம்
  • முழுமையான விண்ணப்பம் கட்டாயம்
  • மெரிட் அடிப்படையில் தேர்வு
  • ரூ.30,000 வரை உதவித்தொகை.

ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
மாணவர்களுக்கு சூப்பர் அப்டேட்
Image Credit : X

மாணவர்களுக்கு சூப்பர் அப்டேட்

இந்த இன்டர்ன்ஷிப் சுமார் 6 மாதங்கள் நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.30,000 உதவித்தொகை வழங்கப்படும். முதல் 3 மாதங்கள் முடிந்தது ரூ.15,000 மற்றும் இறுதியில் மற்ற தொகை வழங்கப்படும்.

மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

  • நடைமுறை பயிற்சி
  • ஆராய்ச்சி அனுபவம்
  • டிஆர்டிஓ வெளிப்பாடு
  • தொழில் வளர்ச்சி வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, மார்க் ஷீட் மற்றும் கல்லூரி அனுமதி கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர், DEBEL, டிஆர்டிஓ, ADE வளாகம், புதிய திப்பசந்திரா, பெங்களூரு - 560075

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2026
  • தேர்வு தகவல் வெளியீடு: ஜூன் 18, 2026
  • இன்டர்ன்ஷிப் தொடக்கம்: ஜூலை 1, 2026

எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்பது மாணவர்களுக்கு கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி துறையில் எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
தொழில்
பயிற்சித் திட்டங்கள்
வேலைவாய்ப்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Govt Jobs 2026: அரசு வேலை..8ஆம் வகுப்பு முதல் Any Degree வரை! மாதம் ரூ.25,000 சம்பளம்
Recommended image2
8th Pay Commission: வருஷத்துக்கு 4 முறை DA உயர்வா? 25% தாண்டுனா Basic Pay-ல சேருமா?
Recommended image3
8th Pay Commission: மாதம் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? 50% உயர்கிறதா பென்ஷன்? அரசு ஊழியர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதா?
Related Stories
Recommended image1
Railway Jobs : ரயில்வேயில் 11,127 வேலை வாய்ப்புகள்.. அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி.. முழு விபரம்!
Recommended image2
AI-யால் வேலை போகுமா? ஆபீஸில் நீங்கள் கில்லி ஆக இந்த 5 வழிகள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved