தேர்வர்களே அலர்ட் !! குரூப் 2 முதல்நிலை தேர்வின் முடிவுகள் எப்போது வெளியீடு..? வெளியான முக்கிய தகவல்

கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

Group 2 preliminary exam result 2022

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,41 பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட உத்தேச கால அட்டவணையில், ஜூன் மாதத்தில் முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

ஆனால் இதுவரை குரூப் 2 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான  மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி  7,138  காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனால் குரூப் 4 தேர்வு முடிவுகளுக்கு பிறகு தான் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகின.

மேலும் படிக்க:கவனத்திற்கு.. முக்கிய செய்தி !! பொறியியல் கலந்தாய்வு எப்போது.? உயர்கல்வித்துறை புதிய தகவல்

இந்நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், முதல்நிலைத் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வினை எழுத முடியும். அதுமட்டுமில்லாமல், தேர்வுக்குத் தயாராக போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:அலர்ட் மாணவர்களே !! பொறியியல் படிப்பு புதிய பாடத்திட்டம் .. 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றிய அண்ணா பல்கலை.,

2022 ஆண்டிற்கான குரூப் 2 தேர்வினை, சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள் எனவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்தால் தேர்வு செய்யப்படுவர் என்றூ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios