Customs Recruitment சென்னை சுங்கத்துறையில் சமையல் கலைஞர் பணிக்கு ஆட்கள் தேர்வு. 10-ம் வகுப்பு தகுதி. ரூ.69,000 வரை சம்பளம். டிசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கவும்.
பொதுவாகப் படித்தவர்களுக்கு மட்டும்தான் அரசு வேலை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், கையில் ஒரு தொழிலும் திறமையும் இருந்தால் மத்திய அரசில் கெத்தாக வேலை பார்க்கலாம். அப்படியொரு வாய்ப்பை வழங்குகிறது சென்னை சுங்கத்துறை (Chennai Customs). சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நல்ல சம்பளத்தில் நிரந்தர அரசு வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி மற்றும் சம்பள விவரம் என்ன?
சென்னை சுங்கத் துறையில் உள்ள கேண்டீனில் (Departmental Canteen) காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தான் இந்த அறிவிப்பு.
• ஹல்வாய் கம் குக் (Halwai Cum Cook): இந்தப் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. இதற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் கிடைக்கும்.
• உதவி ஹல்வாய் கம் குக் (Assistant Halwai Cum Cook): இந்தப் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. இதற்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், கேட்டரிங் (Catering) துறையில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
• முக்கிய குறிப்பு: 'ஹல்வாய் கம் குக்' பணிக்கு அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் முன் அனுபவமும், உதவியாளர் பணிக்கு 1 ஆண்டு முன் அனுபவமும் அவசியம்.
வயது வரம்பு மற்றும் தேர்வு முறை
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் செய்முறைத் தேர்வு (Skill Test/Cooking Test) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குறிப்பாகச் சுகாதாரம் மற்றும் சமையல் திறன் சோதிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
1. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் (கல்வி, வயது, அனுபவம்), இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ரூ.25 தபால் வில்லை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட இரண்டு கவர்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
2. கவரின் மேலே “APPLICATION FOR DEPARTMENTAL CANTEEN POSTS, CHENNAI CUSTOMS” என்று தடிமனான எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT),
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (GENERAL),
CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI,
CHENNAI – 600 001.
கடைசி தேதி:
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2025. விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. எனவே, தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்!


