- Home
- Business
- SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-26 நிதியாண்டில் சுமார் 16,000 புதிய ஊழியர்களை நியமிக்கவும், 300 புதிய கிளைகளைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், வங்கியின் வணிகத்தை ₹200 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதிரடி அறிவிப்புகளை வெளிட்டுள்ள SBI
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) நடப்பு நிதியாண்டிலும் (2025-26) சுமார் 16,000 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதே எண்ணிக்கையில் ஊழியர்களை வங்கி சேர்க்கும் என்று வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான CS Setty தெரிவித்தார். வணிக விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
300 புதிய கிளைகளை எஸ்பிஐ திறக்க திட்டம்
பணியிடங்களை நிரப்பும் வகையில் நடப்பு நிதியாண்டில் 200 முதல் 300 புதிய கிளைகளை எஸ்பிஐ திறக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக உருவாகும் குடியிருப்புப் பகுதிகள், நகர்ப்புற வளர்ச்சி பெறும் இடங்கள் ஆகியவற்றில் வங்கி இல்லாத இடங்களை கண்டறிந்து அங்கு கிளைகள் தொடங்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார். அதேபோல், வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் இடங்களில் ஏடிஎம்களையும் தரவு ஆய்வின் அடிப்படையில் புதிதாக அமைக்கப்படும் என்றார்.
ரூ.200 லட்சம் கோடியாக உயர்த்த முடிவு
எஸ்பிஐயின் வணிகத்தை அடுத்த 6-7 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தி, தற்போதைய ₹100 லட்சம் கோடியிலிருந்து ₹200 லட்சம் கோடியாக உயர்த்துவதே இந்த கிளை விரிவாக்கமும், ஊழியர் நியமனமும் கொண்ட இலக்கு என்று CS Setty விளக்கினார்
இவ்ளோ பேர் வேலை பாக்குறாங்கப்பா!
2025 மார்ச் மாத நிலவரப்படி, எஸ்பிஐயில் மொத்தம் 2.36 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் ஆகும். முதல் ஆறு மாதங்களில் (H1FY26) ஊழியர்களுக்கான செலவு கடந்த ஆண்டைவிட 11 சதவீதம் உயர்ந்து ₹36,837 கோடியை எட்டியுள்ளது.
துணை நிறுவனத்தை விரிவுப்படுத்த முடிவு
கிராமப்புறம் - அரை நகர்ப்புற சேவைக்கு புதிய துணை நிறுவனம் வங்கியின் முழு உடைமையிலான துணை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆபரேஷன்ஸ் சப்போர்ட் சர்வீசஸ் (SBOSS) மூலம் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. அரசு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், விவசாய கடன் விண்ணப்பங்கள், சிறு வணிக கடன்கள் ஆகியவற்றை பெறுவது, 60,000-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த துணை நிறுவனம் பயன்படுத்தப்படும்.
6,000 பேரை புதிதாக நியமிக்க வங்கி முடிவு
குறிப்பாக, ஏடிஎம்களை கண்காணிக்கும் ஊழியர்களை “ஏடிஎம் மித்ரா” என்று வங்கி அழைக்கிறது. உள்ளூர் மக்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டு, ஏடிஎம் இயங்குதல், பராமரிப்பு, சுத்தம் உள்ளிட்டவற்றை கவனிப்பர். ரிசர்வ் வங்கி அனுமதித்த 20-க்கும் மேற்பட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்ளலாம். மேலும், கிளைகளில் தரைப்பணி ஒருங்கிணைப்புக்காக 6,000 பேரை புதிதாக நியமிக்கவும் வங்கி முடிவு செய்துள்ளது.
விரைவான வங்கி சேவையை உறுதி செய்யும்
வளரும் இந்திய பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள எஸ்பிஐ மேற்கொள்ளும் இந்த பெரும் விரிவாக்க திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிதான மற்றும் விரைவான வங்கி சேவையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

