Job Vacancy: விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.80,000 சம்பளத்தில் அரசு வேலை.!
சென்னை ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் துறையில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்காக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Tax Assistant, Stenographer, Havaldar, MTS போன்ற பதவிகளுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அட்டகாசமான வாய்ப்பு மக்களே
GST & சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை துறையில் மெரிட்டோரியஸ் ஸ்போர்ட்ஸ் பெர்சன்கள்க்கு 20 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு 08.12.2025 முதல் 07.01.2026 வரை அதிகாரப்பூர்வ தளத்தில் (https://gstchennai.gov.in/ ) திறந்து இருக்கும். விண்ணப்பிக்க முன்பு கடைசி தேதி, தகுதிகள், தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்
இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- Tax Assistant – 11 இடங்கள்
- Stenographer Grade II – 01 இடம்
- Havaldar – 07 இடங்கள்
- Multi Tasking Staff – 01 இடம்
சென்னை, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பணியமைப்பு நடைபெறும்.
கல்வித் தகுதி
- ஒவ்வொரு பதவிக்கும் தேவையான தகுதிகள்:
- Tax Assistant – ஏதேனும் பட்டப்படிப்பு
- Steno Grade II – 12ஆம் வகுப்பு தேர்ச்சி
- Havaldar – 10ஆம் வகுப்பு
- MTS – 10ஆம் வகுப்பு
மேலும், விண்ணப்பதாரர்கள் நாட்டை / மாநிலத்தை / பல்கலைக்கழகத்தை / பள்ளி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
விளையாட்டு துறைகள்
கீழ்கண்ட விளையாட்டுகளில் திறமை பெற்றவர்களுக்கு முன்னுரிமை:
- கிரிக்கெட் (ஆண்கள்)
- கால்பந்து (ஆண்கள்)
- ஹாக்கி (ஆண்கள்)
- கபடி (ஆண்கள்)
- வாலிபால் (ஆண்கள்)
- அத்த்லெடிக்ஸ் (ஆண்/பெண்)
- நீச்சல் (ஆண்/பெண்)
Khelo India போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு, சம்பள விவரம்
(07.01.2026 தேதியின்படி)
- TA / Steno / Havaldar – 18 முதல் 27 வயது
- MTS – 18 முதல் 25 வயது
அரசு விதிப்படி SC/ST, OBC, PwBD, Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு வயது சலுகை வழங்கப்படும்.
சம்பள விவரம்
- Tax Assistant / Steno – Level 4 : ₹25,500 – ₹81,100
- Havaldar / MTS – Level 1 : ₹18,000 – ₹56,900
தேர்வு முறைகள்
- Shortlisting
- Sports Trial
- மருத்துவ பரிசோதனை
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைன் பதிவு தொடக்கம் – 08.12.2025 கடைசி தேதி – 07.01.2026, விண்ணப்பிக்கும் போது செயல்படும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

